
வடக்கில் நடைபெறும் தேர்த்தல் இராணுவ ஆட்சிக்குத் துணையான அதிகாரம் எதுவும் அற்ற அமைப்பை ஏற்படுத்துவதற்காகவே இலங்கை அரசு நடத்துகிறது. இந்திய அரசால் வழி நடத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவ அதிகாரத்தின் கீழ் நடத்தப்படும் இத் தேர்தல் அர்த்தமற்றது எனக் கூறி அதனை நிராகரிப்பதற்குப் பதிலாக அரசியலோடு தொடர்புகளற்ற நிர்வாகி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது.
ஏனைய இலங்கை பாசிச அரசின் துணைக் கட்சிகளான ஈ.பி.டி.பி போன்றவற்றிற்கு எந்தத் வகையிலும் குறைவின்றி அதிகாரமற்ற சிம்மாசனத்திற்காக மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி வருகிறது