Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாக்லாந்து பிரச்சனையில் பிராந்திய ஆதரவு : அர்ஜென்டினா மகிழ்ச்சி

பாக்லாந்து தீவுகள் என்று அறியப்படும் மால்வினாஸ் தீவுகள் பிரச்சனையில் 33 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று அர்ஜென்டினா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோர்ஜ் டையானா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாக்லாந்து தீவுகளில் பிரிட்டன் எண்ணெய் எடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந் நடவடிக்கைகளை அர்ஜென்டினா எதிர்க்கிறது. இப்பிரச்சனை மெக்சிகோவில் நடந்த மெக்சிகோ – காரிகாம் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

பாக்லாந்து பிரச்சனையில் அர்ஜென்டினாவின் நிலைபாட்டை வலுப்படுத்தும் வகையில் லத்தீன் – அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் 33 வெளியுறவு அமைச்சர்களின் ஆதரவு கிடைத்துள்ளது மிகப் பெரும் ராஜதந்திர வெற்றி யாகும் என்று டையானா வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள் ளது.

அர்ஜென்டினாவின் நிலைபாட்டை ஆதரித்து உச்சி மாநாட்டில் அறிக்கை வெளியிடப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறி யுள்ளார். சர்ச்சைக்குரிய தீவுகளின் இறையாண்மை குறித்து அர்ஜென்டினா வுடன் பிரிட்டன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அர் ஜென்டினாவுக்கு உரிமை யான தீவுகளை பிரிட்டன் அதனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வெனி சுலா ஜனாதிபதி ஹுயூகோ சாவேஸ் கூறியுள்ளார்.

சாவேஸ் வழக்கமாக நடத்தும் ‘ஹலோ பிரசி டென்ட்’ என்ற தொலைக் காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சியில் ‘மால்வினாஸ் அர்ஜென்டினாவுடையது. நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாக அதை திருப் பிக் கொடுக்க வேண்டும்’ என்று பிரிட்டிஷ் ராணி யிடம் கூறுவது போல் உரைத்துள்ளார். இப்பிரச்ச னையில் ரியோ குழும உச்சி மாநாட்டில் கலந்து கொள் ளும் லத்தீன் -அமெரிக்கா – கரீபியன் நாடுகள் அர்ஜென் டினாவை ஆதரிக்க வேண் டுமென்றும் அவர் வற்புறுத் தியுள்ளார்.

பிரிட்டிஷ் எண்ணெய் தோண்டும் கருவியான ‘தி ஓசன் கார்டியன்’ கடலில் துளை போடும் பணியைத் திங்களன்று தொடங்கியது. அர்ஜென்டினாவின் எதிர்ப்பை பிரிட்டிஷ் பாது காப்பு அமைச்சர் பில் ரம் மெல் நிராகரித்தார்.

பிரிட்டிஷ் அரசுக்கு பாக்லாந்து தீவுக்கடலின் மேல் சட்டப்பூர்வமான உரிமை உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version