பாகிஸ்தானில் தற்போது பயங்கரவாதம் பெருகி வருவதற்கு ஒருவகையில் அமெரிக்காவும் காரணம் என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக சோவியத் யூனியன் செயல்பட்ட போது அவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து முனைப்புடன் செயல்பட்ட அமெரிக்கா, அதன் பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது ஹில்லாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு அந்நாட்டு அரசுதான் காரணம் என அனைவரும் குற்றம்சாற்றுகிறோம்; ஓரிரு நாட்களுக்கு முன் நான் கூட பாகிஸ்தான் மீது குற்றம் சாற்றினேன்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்நாட்டு ராணுவம், உளவுத் துறையிடம் உள்ள தொடர்புகளை நாம் துண்டித்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளையே தற்போது நாம் அனுபவித்து வருகிறோம்.
அந்த வகையில் பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு நாமும் (அமெரிக்கா) ஒரு காரணம் எனப் பொறுப்பேற்க வேண்டும் என ஹில்லாரி கூறினார்.