இஸ்லாமாபாத்தில் இன்று காலை 9 மணியளவில் வணிகப் பகுதியில் இராணுவ ஜீப்பில் வந்துக் கொண்டிருந்தபோது, எதிர்த்திசையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த தீவிரவாதிகள், ஜீப்பை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் பிரிகேடியரும், அவருடைய மெய்க்காப்பாளராக இருந்த இராணுவ வீரரும் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒரு இராணுவ வீரர் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும், அவர்களைப் பிடிக்க இஸ்லாம்பாத்திலுள்ள அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்படுவதாகவும் பாகிஸ்தான் தொலைக்காட்சிச் செய்தி கூறியுள்ளது.