ஆக்ரா உச்சி மாநாட்டின்போது, தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உறுதி அளித்தது. ஆனால், இன்றும்கூட தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. ஆனால், 2 நாளுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை அமைதியின் உருவம் என்று மன்மோகன் சிங் பாராட்டியது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜெய்ப்பூரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,பாகிஸ்தான் ராணுவத்தில் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ,யின் தலையீட்டை ஒழிக்க ஜனநாயக சக்திகளை பலப்படுத்த வேண்டும். அந்த வகையில், கிலானியை பிரதமர் பாராட்டியது சரிதான் என்றார்.
தெற்காசியாவில் அமரிக்க ஆதிக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலின் தற்காலிக அரசியல் நகர்வாகவே மன்மோகன் சிங் இன் திடீர் அனுதாபம் கருதப்படுகிறது.