Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம்: இந்தியா ஆட்சேபணை

காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ரமித்து நிற்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.ஜம்முகாஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கில்கிட்பல்திஸ்தான் பகுதியில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான சீன ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்தியா தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.சீனாவுக்கான தூதர் ஜெய்ஷங்கர், பெய்ஜிங்கில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை உதவி அமைச்சர் ஜாங் ஜிஜுனுடனான சந்திப்பின்போது சீன ராணுவத்தின் வருகை குறித்த இந்தியாவின் ஆட்சேபத்தை தெரிவித்தார் எனத் தகவல்கள் தெரிவித்தன.மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் விடுதலை ராணுவத்தின்(பிஎல்ஏ) வருகை குறித்தும் ஜெய்ஷங்கர் இந்தியாவின் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார்.முன்னதாக, சீனா தொடர்பான அண்மைக்கால நிகழ்வுகளை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கிய பின் ஜெய்ஷங்கர் தில்லியிலிருந்து நேற்று பெய்ஜிங் திரும்பினார்.

Exit mobile version