Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலி:பாக். இராணுவம்.

பாகிஸ்தானின் ஸவாத் மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை வழிநடத்திய தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலியானார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி தீவிரவாதத்தில் ஈடுபட்டு வந்த தலிபான் தீவிரவாதிகள், ஸ்வாத் மலைப் பகுதியில் ஊடுருவினர். இவர்களை முற்றிலுமாக ஒழிக்கும்படி அமெரிக்கா வற்புறுத்தியது.

இதையடுத்து ஸ்வாத் மலைப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம் தீவிரமாக இறங்கியது. தலிபான்களின் முக்கிய தலைவர்கள் 21 பேரின் பெயர்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டு அவர்களின் தலைக்கு பல கோடி ரூபா பரிசு வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.

தீவிரவாத தலைவர்களின் பட்டியலை பாகிஸ்தான் அரசு வெளியிடுவது இதுவே முதல் முறை. இந்நிலையில், ஸ்வாத் பகுதியில் தீவிரவாதிகளை வழிநடத்திய தலிபான் தலைவர் முல்லா பசுல்லாவை இராணுவம் சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Exit mobile version