Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தானின் அரசுக்கு எதிரான பிரிவினருக்கு இந்தியா உதவி!

 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான பிரிவினருக்கு இந்தியா உதவி செய்வதாக பிரதமர் யூசுப் ரஸா கிலானி குற்றம்சாற்றியுள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள ஷார்ம் எல் ஷேய்க் நகரத்தில் அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் கிலானி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் எகிப்தில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் யூசுப் ரஸா கிலானி செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை தாக்குதல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பேசியதாகவும், அதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாக கூறினார்.

பாகிஸ்தானுக்கு இந்தியாவிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக இப்போது கூற முடியாது. ஆனால் பலுசிஸ்தான் மற்றும் சில எல்லையோரப் பகுதிகளில் இந்தியாவின் ஊடுருவல் கவலை அளிப்பதாக இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்கும்போது அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் ஒப்படைப்போம். இப்போதைக்கு பேச்சுவார்த்தை தொடங்குவது பற்றித்தான் பேசி வருகிறோம் என்று யூசுப் ரஸா கிலானி கூறினார்.

Exit mobile version