இலங்கையில் தமிழ் முஸ்லீம் தேசிய இனத்தின் மீதான சிங்கள பெளத்த மேலாதிக்கவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
சிறுக சிறுக இனாச்சுத்திகரிப்பு முஸ்லீம் தமிழகர்ள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர், அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.