படையினரிடம் சரணடைந்த புலிகளின் எண்ணிக்கை 15ஆயிரம் எனவும், 12 ஆயிரம் என்றும் 8ஆயிரம் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 839 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர் என அமைச்சர் இப்போது கூறுகின்றார்.
ஆக, ஏனையோர் எங்கே? ஆயிரக்கணக்கான போராளிகள். அவர்கள் குறித்த தகவல்கள் எங்கே?? இன்று இலங்கையில் வாழும் சிலர் மட்டுமே இந்த அவலம் குறித்துப் பேசுகின்றனர். புலம் பெயர் புலிகளோ தாம் தேசியத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்குண்டு, “பிரபாகரன் வாழ்கிறாரா மரணித்தாரா”, “புலிக்கொடி வெறும் புலிக்கொடியா இல்லை தேசியக்கொடியா”, “கட்டமைப்பா உடைந்த அமைப்பா” என்றெல்லாம் மிகத் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேசிய அரசியல் வியாபரிக்களுக் கடந்து மக்கள் பற்றோடு புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.