Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பல்தேசியக் கொள்ளைக்கு இலங்கை சிறந்த நாடு : அமெரிக்காவின் இதயத்துடிப்பு

NASDAQ_studioஅமெரிக்காவில் பங்கு சந்தை நிறுவனம் ஒன்றை நடத்திவருபவரான பீட்டர் கோலி அமெரிக்க தேசிய பங்குசந்தையான நஸ்டாக் நிறுவனத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையை முதலீட்டிற்காக பல்தேசிய நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளார். இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்தின் இதயத்துடிப்பு என்றழைக்கப்ப்படும் நஸ்டாக் இலிருந்து இனப்படுகொலை அரசின் எல்லைக்குள் முதலிடுங்கள் என அழைக்கப்படுவது இதுவே முதல்தடவை. 2009 ஆம் ஆண்டு மே மாததில் நடத்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலை பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்காக என்பதை பீட்டர் கோலியின் வாக்குமூலம் தெளிவுபடுத்துகிறது. இலங்கை பல்தேசியப் பெரு நிறுவனங்களின் கொள்ளைக்காக ராஜபக்ச அரசினால் அகலத் திறந்துவிடப்பட்டுள்ளது.

Energizer Battery, Mast Industries, Smart Shirts (a subsidiary of Kellwood Industries), Chevron, Citibank, 3M, Coca-Cola, Pepsi Co, Fitch Ratings, AES Corporation, AIG/Chartis Insurance, American Liquid Packaging Systems USA, Virtusa, Avery Denison, Motorola Solutions, Amsafe Bridport, RR Donnelly, Revlon (through its Indian subsidiary) ஆகிய பல்தேசியப் பெரு நிறுவனங்கள் 2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் தமது முதலீட்டைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தவிர இந்தியா, சீனா, மலேசியா போன்ற நாடுகளைத் தளமாகக்கொண்டுள்ள நிறுவனங்களும் இலங்கையை வல்லூறுகள் போன்று வட்டமிடுகின்றன.
2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் டொலகளை அமெரிக்கா முதலிடும் என இலங்கை அரசு கணிப்பிடுகிறது

பல்தேசியக் கோப்ரட் கொள்ளையர்கள் இலங்கை மக்களைச் சூறையாடுவதை மறைப்பதற்காக சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதம் தூண்டிவிடப்பட்டு தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீதான இனப்படுகொலை கட்டவிட்த்து விடப்படுகின்றது. இதன் மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்திற்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் எதிரான போராட்டம் இனவாதமாகக் குறுக்கப்பட்டுச் சிதைக்கப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளிலும் கோடம்பாக்கத்திலும் மக்கள் போராடங்களைக் குடியமர்த்திவிட்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு வழிவிட்டுக்கொடுப்பதற்காக புலம்பெயர் இனவாத அமைப்புக்கள் உளவு நிறுவனங்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலுமிருந்து விடுதலையடைந்து சுய நிர்ணைய உரிமைக்கான மக்கள் போராட்டங்கள் தோன்றும் வரை இனச்சுத்திகரிப்பும் பல்தேசியக் கொள்ளையும் தொடரும்.

Exit mobile version