Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பல்தேசியக் கம்பனிக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலகமே விற்பனையானது

புலிகளை அழிப்பதற்கான முன் முயற்சிகளை இந்திய அரசிற்கு முன்பதாகவே அமரிக்கா ஆரம்பித்துவிட்டதாக விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. உலக நாடுகள் தமது வர்த்தக நலன்களுக்காக புலிகளையும் அப்பாவி மக்களையும் அழித்த பலன்களை இப்போது அறுவடை செய்கின்றன. இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலமே பல்தேசியக் கம்பனிக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
பாதுகாப்பு அமைச்சும், இராணுவத் தலைமையகமும் ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட முன்னணி ஹோட்டல் அமைக்கும் ஷங்ரிலா நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் 10 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் ஷங்ரிலா நிறுவனம் 7 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது.

இந்த ஹோட்டல் 500 அறைகளைக் கொண்டதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாதுகாப்பு அமைச்சையும் இராணுவத் தலைமையத்தையும் பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கான நிர்மாணப்பணிகள் இவ்வருடமும் அடுத்த வருடமும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version