இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு வருவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்லைக்கழக விரிவுரையாளர்கள் பேச்சு உரிமை கூட பறிக்கப்பட்டுயள்ளதாக சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் மஹிம் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஊதிய முரண்பாடுகள், ஊதிய அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய தீர்வுகளை வழங்கவில்லை எனவும் விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.