Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எந்த ஜனநாயகப் போராட்டத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் எதிராகவே செயற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழங்களின் உயர்பீடங்களில் இடம் பெற்றுக்கொள்ள அதிகாரவர்க்கத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பாசிச ஆட்சி தலைவிரித்தாடும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல்கலைக்கழக நிர்வாகம் பாசிசத்தின் கூறாகவே செயற்படும். மாணவர்களின் ஒன்றுகூடும் உரிமையையும் மாணவர்களையும் காட்டிக்கொடுப்பதில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பங்கு பிரதானமானது.
மாணவர்களின் ஒன்றுகூடும் உரிமைக்கு எதிரான பாசிச ஒடுக்குமுறை மாணவர்களைப் படிப்பதற்காகப் போராடுவதற்கும் போராடுவதற்காகப் படிப்பதற்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது.

Exit mobile version