பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்திலும் இன்று மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளது.
அனைத்துப் பல்கலைகழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இப்பேரணியை நடாத்தவுள்ளது. இப்பேரணி காலை 9.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து ஆரம்பமாகி பருத்தித்துறைவீதி வழியாக யாழ்ப்பாணம் வந்தடையவுள்ளது.
இதேவேளை, இன்று காலியிலும் கண்டியிலுமிருந்து அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடை பயணப் பேரணிகள் ஆரம்பமாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.