Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பல்கலைக்கழக அனுமதி 25 லட்சம் : பதவி நீக்கம்

தனியார் பல் மருத்துவக் கல்லூரி முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க யி25 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலனின் பதவியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்தியாவில் கல்வி தனியார் மயப்படுத்த காலம் முதல் கல்வி என்பது முழுமையான வியாபாரமாக மாறிவிட்டது. குணசீலன் எதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டர் என்பது தெளிவில்லை. தனியார் கல்வி என்பதே பணத்தை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.ஊழலும் லஞ்சமும்  வழமையானதே.

சென்னை அருகே மேல்மருவத்தூரில் ஒரு பல் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் பிஜி டெண்டல் பாடப்பிரிவை (முதுநிலை படிப்பு) துவங்க கடந்த 2012ல் இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது. இதையடுத்து, அந்த பல் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க யி1 கோடி தரவேண்டும் என்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசன் கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த ராமபத்திரன் உடன்பட்டுள்ளார்.

ஜனவரி 7ம் தேதி ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து ராமபத்திரன் யி25 லட்சத்தை முருகேசனிடம் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த கருணாநிதி, ஆற்காடு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version