வடபகுதி பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு இந்தியா இலங்கை அரசுடன் பங்களிக்கும் என இந்தியத் தூதர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். தென்னிந்திய விமானங்களின் பிரதான போக்குவரத்துத் தளமாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தினால் சிறிய பரப்பளவைக் கொண்டுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுற்றுச் சூழல் நச்சடையும் நிலை காணப்படுவதாக சுற்றுச் சூழல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதே வேளை காங்கேசந்துறை துறைமுகத்தை நவீன மயமாகுதல் இந்தியாவின் மற்றொரு திட்டம் எனவும் தூதுவர் குறிப்பிட்டார்.