Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பலாலியைப் போன்று சோமாலியாவிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம்:அதிகாரி ஒப்புதல்

US-PLANESசோமாலியாவில் இரகசிய அமரிக்க இராணுவச் சிப்பாய்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவில் நிலைகொண்டிருக்கும் இச் சிப்பாய்கள் தொடர்பான தகவல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இத் தகவலை கடந்தவாரம் ரொய்டருக்கு வழங்கிய நேர்காணலில் அமெரிக்க அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார்.

2013 அக்டோபரில் சோமாலியாவிற்கு சில ஆலோசகர்களை நியமித்ததை பெண்டகன் வெளிப்படுத்தியிருந்தது, ஆனால் அங்கு 2007 முதல் பெருமளவிலான படைகள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. 2014 ஜனவரியில் அந்நாட்டில் அமெரிக்க படைகள் இருப்பதை அமெரிக்க ஆபிரிக்க கட்டளையகம் (AFRICOM) ஒப்புக் கொண்டது ஆனால் ஐந்துக்கும் குறைவான படைகளே இருப்பதாகக் கூறியது. BBC யின் சர்வதேச நிரூபரான மார்க் டோயல் இந்த வாரம் ஒரு கட்டுரையில், தான் சமீபத்தில் சோமாலியாவிற்கு சென்றிருந்த போது, வலுவாக ஆயுதமேந்திய மற்றும் “தெளிவான செயல்பாடுடைய” அமெரிக்க படைகளை தனிப்பட்ட முறையில் பார்த்ததாக எழுதியுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக சோமாலியாவில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க கொலைப்படைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த போதும் முதல்தடவையாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உண்மையை ஒப்புகொண்டுள்ளார்.

ஆபிரிக்க கட்டளையகத்தைப் போன்று ஆசிய பசிபிக் கட்டளையகம் பலாலியில் தனது இராணுவத்தை நிறுத்தியுள்ளதற்கான தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அமெரிக்க அடியாட்படைகள் போன்று செயற்படும் தமிழினவாதத் தலைமைகள் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை.

மக்களின் இரத்த வெள்ளத்தில் நீந்தி மூன்றாம் உலக நாடுகளில் சென்று குந்தியிருக்கும் அமெரிக்க இராணுவம் இந்த நாடுகளை தனது நேரடிக் காலனிகளாக மாற்றிவருகின்றது.

பலாலியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம் தொடர்பான தகவல்கள்:

பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்

Exit mobile version