Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறிப்பு கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இனந்தெரியாத குழுவினர் பொதுமக்களிடமிருந்து பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

கிளிநொச்சியில் இராமநாதபுரம், வட்டக்கச்சி, மலையாலபுரம், பாரதிபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேற்றிரவு இராணுவச் சீருடையில் வந்த இனந்தெரியாத குழுவினரால் வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று 20 கிராமங்களில் வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குறிப்பிடுகிறது.

Exit mobile version