Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பலஸ்தீனியர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்கள் பிரித்தானியாவில் தயாரானவை

Israels-long-range-UAV-no-gamechangerமனித உரிமைகள் மீறப்படுவதைக் காரணம்காட்டி உலகில் இரண்டு நாடுகளுக்கு மட்டுமே பிரித்தானிய அரசாங்கம் ஆயுத விற்பனைகளைத் தடைசெய்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக 49 வேறுபட்ட அனுமதிகளை பிரித்தானிய அரசு வழங்கியுள்ளது தெரிந்ததே.

இன்று காசாவில் பலஸ்தீனியர்களின் பாரம்பரியப் பிரதேசங்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவரும் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்களில் பல பிரித்தானியாவில் உற்பத்திசெய்யப்பட்டவை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக 2010 ஆம் ஆண்டிலிருந்து 131 அனுமதிகளை பிரித்தானிய அரசு ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களின் பெறுமதி 42 மில்லியன் பவுண்ஸ்களாகும்.

இப்பொழுது காசாவில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களின் இயந்திரங்களை பிரித்தானியாவில் லிச்பீல்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஆயுத உற்பத்தி நிறுவனமே வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம், Elbit  இஸ்ரேலில் அமைந்துள்ளது. இஸ்ரேலைத் தவிர இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாகச் செயற்படும் சவூதி அரேபியாவிற்கும் பிரித்தானிய பாரிய அளவில் ஆயுதங்களை விற்பனை செய்கிறது. சமாதானம் குறித்தும் அமைதி குறித்தும் அறிக்கைப் போர் நடத்தும் பிரித்தானியா பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

பாலஸ்தீனில் இஸ்லாமியர்கள் கொசுக்கள் போல கொன்று குவிக்கப்படும் போது மூச்சுவிடாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள், சவூதி அரேபியாவை இஸ்லாத்தின் உறைவிடம் என்கின்றனர்.

இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியாவின் நோக்கம் அழிவுகளின் மீது தனது ஏகாதிபத்திய அதிகாரத்தை நிறுவிக்கொள்வதே.

Exit mobile version