Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பறப்பிலிருந்த துருப்புக்காவி விமானம் வானில் மறைந்தது எப்படி? : நோர்வே நக்கீரா

வியாழன் பிற்பகல் நோவேயிய வான்படைக்குச் சொந்தமான 3விமானங்கள் வானில் உயர்த்தப்பட்டது ஆனால் இரண்டு மட்டுமே தரை இறங்கியது. இதில் கர்க்குலஸ் சி-130ஜே என்ற துருப்புக்காவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை. சீவ் என்று பெயரிடப்பட்ட இந்தத் துருப்புக்காவி விமானத்தில் பயணம் செய்த ஐய்வர் மாயமாக மறைந்துள்ளனர். இதில் ஒரு நோவேயியப் பெண்ணும் உள்ளடங்குவார். இந்த ஐவரில் இருவர் மிக மிகத்திறமையான, பலபறப்புகளை மேற்கொண்ட, அனுபவமுள்ள விமானிகள் ஆவர் என்று விமானப்படைத்தளபதி ஊடகங்களுக்குச் செய்தி பகன்றுள்ளார்.

வடநோர்வேயின் அருகிலுள்ள சுவீடன் பகுதியான கிருணா என்ற விமானத்தளத்துக்கு மேற்காக 8மைல்கள் தொலைவில் இந்த விமானமானது றாடாரில் இருந்து மறைந்துள்ளது. அன்றைய காலநிலை கடுமையாகவும், சடுதியான மாற்றங்கொண்டதாகவும், பனிமூட்டமாகவும், சுழல்காற்று (ரேர்புலன்ஸ்) கொண்டதாகவும் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த கர்க்குலஸ் துருப்புக்காவி விமானமானது பத்து வருடமாக கோல் றெஸ்போன்ஸ் (ஊழடன சுநளிழளெந) என்ற நோர்வேயின் பெரியபயிற்சிக்கழத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது ஏவனெஸ் என்ற தளத்தில் இருந்து தடபாடங்கள், உணவு போன்றவற்றையும், இரண்டு துருப்புக்களையும் பயிற்சிக்களத்துக்கு எடுத்துவருவதற்காகவே புறப்பட்டது. 14.43மணியளவில் விமானத்தில் பிசகு இருப்பதாக கிருணாவிலுள்ள செய்திக் கோபுரத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் சுமார் 14:53 அளவில் விமானம் இராடார் (கதிலி)யில் இருந்தும் மற்றைய தொலைத்தொடர்புச் சாதனங்களில் இருந்து மறைந்ததாகவும். 14:56க்கு சீவீடன் பாதுகாப்புச்சேவை அறிவித்தது. அப்போது விமானமானது கிருணாவில் இருந்து 8 மைல்களுக்கு அப்பாலுள்ள மலைஉச்சி மீது கடுமையான காலநிலையில் இருந்தாக அறியப்படுகிறது.

தேடுதல் வேட்டையில் சுவீடன், நோர்வே விமானப்படையும், தேடுதல்படையும் உலங்குவானூர்தி, சினோஸ்கூட்டர் உதவியுடனும் வெப்பச்சமிஞ்ஞைநாடிக் கருவிகளைக் கொண்டும் தேடுதலில் ஈடுபட்டனர். பயன் எதுவும் கிடைக்காத போதும் நேற்று சனிக்கிழமை பயணம் செய்த விமானப்படையினரின் அங்கியின் ஒரு கை கண்டுபிடிக்கப்பட்டது. இச்செய்தி ஞாயிறான இன்று எழுதப்படும் வரை விமானத்தின் பாகம் ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வேயிய ஊடகங்களூக்கு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. கறுப்புப்பெட்டி இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை

விமானமோ ஏனையபாகங்களோ, உதிரிப்பாகங்களோ அல்லது காலம்சென்ற விமானப்படையினரது உடலங்களோ சினோவினுள் புதைந்திருக்கலாம் என்று கருதலாம்.

கர்க்கலஸ் விமானிகளின் தலைவனான திரொன் சோல்னா என்ரிபி, அப்தன்போஸ்தன் ஊடகங்களுக்குக் கொடுத்த செய்திகளின்படி விமானமானது ஒட்டோபைலெட் (தனியங்கிவிமானஒட்டி) பயன்படுத்தப்படவில்லை என்பதாலே இந்த விபத்து நடந்திருக்கலாம் என்பதை ஊகிக்கிறார். ஆனால் அந்த தானியங்கி விமானஒட்டியில் பிழை இருந்திருந்தாலோ? அதுவே பழுதுபட்டதாலோ இந்த விபத்து நடப்பதற்கும் சாத்தியம் உண்டல்லவா? தாழ்பறப்புக்களை மேற்கொள்ளும் இந்த துருப்புக்காவி கர்க்கலஸ் சுமூகமான காலநிலைவேளைகளில் தானியங்கி விமானஓட்டி உதவியின்றியும், கருவிப்பறப்புகள் இன்றியும் பறப்பது வழமையாகும் காரணம் பயிலுணர்களுக்கு இது நற்பயிற்சியைக் கொடுப்பதற்கு இதைவிடச் சிறந்த வழி வேறு எதுவுமில்லை.

இந்தவிமானம் கிளம்பிப் பத்து நிமிடத்தின் பின் இன்னுமொரு கர்குலஸ் விமானம் கிளம்பியது இதுவும் இதேபாதையிலே பறப்பை மேற்கொண்டது. இருப்பினும் விபத்துக்கு உள்ளானகாரணம் என்ன என்பதை ஊகிக்கும் போது சடுதியாக ஏற்படும் காலநிலைமாற்றம் அதாவது புயல், வழியமுக்கம், உயரம், மாறுபட்ட வளியடர்த்தி, புகார் மூட்டம் என்பன காரணிகளாக அமையலாம். நல்ல காலநிலை உள்ளபோது தானியங்கிவிமானவோட்டி இணைக்கப்படாது அதாவது கருவிப்பறப்பு (இன்ஸ்ருமென்ஸ் பறப்பு) இன்றிப் பறக்கும் போது சடுதியாக எற்படும் காலநிலைமாற்றம் கருவிப்பறப்பையோ, தனியங்கிப்பறப்பையோ உடனடியாக ஏற்படுத்தாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது. கறுப்புப் பெட்டி கிடைக்கும் வரை உண்மை நிலமைகள் அறியப்படமாட்டா.

கர்குலஸ்வகை துருப்புக்காவி விமானங்கள் பற்றிய மேலதிக தகவல்.

இந்த இரகவிமானங்கள் ஜெட்மோட்டர் விமானங்களைப் போல் அதிஉயர் பறப்புக்களை மேற்கொள்ள வல்லமை பெற்றவையல்ல. அதேவேளை இந்த விமானங்களைப் போல் பாரங்களைத் தூக்கிச்செல்லும் வல்லமை அற்றவை ஜெற்விமானங்கள். வான் வான் தாக்குதலுக்கும் வான்தரைத்தாக்குதலுக்குமே ஜெற்விமானங்கள் பாவிக்கப்படுகின்றன. கர்குலஸ் சீ இரகம் போன்ற காற்றூதி மோட்டர்களைக் கொண்ட விமானங்கள் உயரம் குறைந்த, வேகம் குறைந்த, பறப்புக்களையே மேற்கொள்ள வல்லவை. ஆனால் இவை போதியளவு பாரத்தைச் சுமந்து செல்ல வல்லமை பெற்றவை. முக்கியமாக நாட்டோவில் அங்கத்துவம் பெறும் நாடுகள் இந்தவிமானத்தையே துருப்புக்காவி, தளபாடக்காவி விமானமாகப் பாவிக்கின்றனர். நாலு இயந்திரங்களைக் கொண்ட இந்தவிமானம் பல தாங்கிகளையும், துருப்புக்கள், தளபாடங்களையும் கொண்டு அதிகூடிய தூரம் குறைந்த எரிபொருளில் கொண்டு செல்ல வல்லன.

இந்த இரகவிமானங்கள் லெக்கீட் மாட்டின் எனும் சிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதன் முதலில் 1954ம் ஆண்டே பறக்கவிடப்பட்டது. பழைய துருப்புக்காவி விமானங்கள் காற்றூர்தி விமானங்களாக இருந்தாலும் இது ரேர்போ கார்ற்றூதிகளைக் கொண்டது. அதாவது ரேர்போ மோட்டர்பாவிப்பதனால் மணித்தியாலங்களுக்கு 610கிலோமீற்றர்களும் 40000அடி உயரம்வரை பறக்கவல்லது.

மறைந்த தமது சகஊழியர்களுக்காக விமானப்படையினர் தம்தளத்தில் நடத்திய இரங்கல், நினைவுகூறல், பிராத்தனை நிகழ்வுவை வேகே எனும் ஊடகத்தில் வெளியிட்ட காணொளியைக் காண்க. இந்நிகழ்வில் நோர்வேயிய அரசரும் கலந்து கொண்டார்.

http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10079377

Exit mobile version