தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற புலம்பெயர் புலிகளின் அமைப்பாக இயங்கிய அமைப்பின் உத்தியோகபூர்வமற்ற பொறுப்பாளராக இருந்த பருதி ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் இருந்து வெளியெறும் போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வெளியேறியதும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் அங்கு காத்திருந்த இருவர் பருதி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். முதல் சூட்டோடு சிறிது தூரம் ஓடிச் சென்ற பருதி அங்கிருந்த பஸ் நிலையத்தின் அருகாமையில் நிலத்தில் விழுந்தபோது மேலும் இருதடவை துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமானார்.
இது குறித்து பாரிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் வினவிய போது, புலிகள் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலின் விளைவாகவே பருதி கொல்லப்பட்டார் எனத் தெரிவித்தனர்.
விநாயகம் மற்றும் பாண்டியன் குழுவினரே கொலைகளின் பின்னணியில் செயற்பட்டதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தரப்பின் உத்தியோகபூர்வமற்ற பகுதிகளிலிருந்து தெரிவித்தனர். வினாயகம் ஆதரவுக் குழுக்களாகக் கருதப்படும் ஏனைய குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.
இணையத் தளங்கள் பல கொலைய இலங்கை அரசே நிகழ்த்தியிருப்பதாகக் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் பருதிக்கு அஞ்சலி செலுத்துவாதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஈழத்தில் மரணத்துள் வாழும் மக்கள் தமது ‘தலைவிதி இதுவோ என’ துயரத்தில் புலம்பும் ஒலி இன்னும் இவர எவரதும் காதுகளை எட்டியதாகத் தெரியவில்லை.