Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைது

ltte-paris-paruthiதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் – (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார். இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் இயக்கத்தின் பெரும் தொகைப் பணம் குறித்த மோதல்கள் அதன் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வந்த காரணத்தால் அந்த இயக்கத்தின் புலம் பெயர் பிரிவுகளே கொலையின் பொறுப்பாளிகள் என்ற சந்தேகம் நிலவியது. இறுதியாகக் கிடைத்த நமபகமான தகவல்களின் அடிப்படையில் இக்கொலையின் சூத்திரதாரிகள் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவத் துணைக்குழுவான சிறீ ரெலொவுமே என்று தெரியவருகிறது. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் பிரஞ்சு போலிஸ் அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.

சயந்தன் வடிவேலு என்ற சிறீ ரெலோ இயக்கத்தின் 48 வயது நபரும், அதே இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் குலேந்திரன் என்ற 32 வயதான நபரும் கொலையுடன் நேரடியான தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரஞ்சு போலீசாரால் நேற்றய தினம் 05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த  சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலிக் குற்றச்சாட்டு, பல்வேறு சமூக விரோதத் தாக்குதல்கள், கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய துணை இராணுவக் குழுவான சிறீ ரெலோ இலங்கை அரச பாசிஸ்டுக்களின் மிகவும் நம்பிக்கையான அமைப்பாகும்.

இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான கீரன் என்ற மாணிகம் நகுலேந்திரன் பிரித்தானிய தமிழ்த் தொலைகாட்சியில் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது குறித்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைத் தாமே காட்டிக்கொடுத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழன்க்கியிருந்தார்.

பருதி கொலை செய்யப்பட்ட மறு நாளே பிரேம், ரமேஷ், தவம் ஆகிய மூவரை பிரஞ்சு காவல்துறை கைது செய்தது. இவர்களில் ஒருவருக்கும் சிறீ ரெலோவுடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் பாசிசக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீண்டுள்ளது. துணை இராணுவக் குழுக்கள் புலம் பெயர் நாடுகளில் சுதந்திரமாக நடமாடுகின்றன. உலகின் அனைத்து உளவுத்துறைகளதும் ஆடுகளமாக மாறிப்போன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரசை அகதிகளான நாடுகளுக்குக் கூட அழைத்து வந்துளது.

Exit mobile version