Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாத சட்டக்கட்டமைப்புக்கு சார்க் அங்கீகாரம்!

03.08.2008
நேற்று ஆரம்பமான சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை கையாள் வதற்கான ஒரு பிராந்திய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கையானது, பயங்கரவாதம் குறித்த குற்றச் செயல்களை கண்டறிவது அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை பறிமுதல் செய்வது உட்பட குற்றச் செயல்கள் பற்றி விசாரணை செய்வதிலும், வழக்கு தொடர்வதிலும் சார்க் அங்கத்துவ நாடுகள் பரஸ்பரம் ஒத்துழைக்கவும் உதவியளிக்கவும் வகை செய்கிறது.

உத்தேச உடன்படிக்கைக்கு அமைய குற்றவியல் விடயங்களில் சார்க்

நாடுகள் முடியுமான அளவுக்கு பரஸ்பரம் சட்ட உதவியை வழங்க இது வகை செய்கிறது.

இந்திய பிரதமரின் இந்த கருத்துக்களை ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், பங்களாதேஷ் அரசாங்கத்தின் பிரதம ஆலோசகர் பக்ருதீன் அஹமட், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சார்க் நாடுகளின் ஏனைய தலைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Exit mobile version