Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதி கோட்டாபயவின் அமைப்பான BBS ஐ புலம்பெயர் நாடுகளில் தடைசெய்யக் கோருவோம்

GOTA_BBSபொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானராச தேரர் என்ற பௌத்த பயங்கரவாதி இலங்கையில் சுதந்திரமாக நடமாடுகிறார். சர்வதேசப் பயங்கரவாதிகளுடன் நேரடித்தொடர்புகளைப் பேணும் இவர் அண்மையில் மியான்மார் பௌத்த பயங்கரவாதியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை தெரிந்ததே.969 என்ற மியான்மார் பௌத்த பயங்கரவாத அமைப்புடன் பொது பல சேனா நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளது. பொது பல சேனாவை Terrorism Research & Analysis Consortium (TRAC) என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பாக கடந்த மாதம் அறிவித்தது.

இலங்கை அரச பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவில் இயங்கும் பொதுபல சேனா உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை புலம்பெயர் நாடுகளில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் என சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதே வேளை அலுத்கம மற்றும் பேருவள பகுதிகள் அமைதிக்குத் திரும்பியுள்ளன.

அலுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காவல்துறையினரே காரணம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் பொறுப்புணர்ச்சியற்ற நடத்தையும், காலம் தாழ்த்திய அணுகுமுறைகளுமே வன்முறை வெடித்து இழப்புக்கள் ஏற்படக் காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொது பல சேனாவின் தலைமையில் பௌத்த பயங்கரவாதிகள் உணவு நிலையங்களைச் சூறையாடியதால் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. அகதிகளின் பிரதான பிரச்சனை உணவு மற்றும் குடிநீர் என்ற நிலை உருவாகியுள்ளது.
மாவனல்லை நகரில் இன்று (17) மாலை கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பினர் உண்ணா விரதப்ப் போராட்டம் ஒன்றையூம் கூட்டம் ஒன்றையும் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு மாவனல்லை மணிக்கூண்டிட்க்கு அருகில் நடைபெறவுள்ளது.
அப்பகுதியில் வன்முறையைத் தூண்டுவதற்காகவே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகினன.

பொது மக்கள் தாக்கப்பட்டமை, அவர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை ஆகியவற்றை கண்டித்து காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் இன்று காலை முதல் ஹர்த்தால்அனுஷ்க்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன.

Exit mobile version