Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதியின் மரணம் : கருத்துத் தெரிவித்தவர்கள் கைது

சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த சனிக்கிழமை இறந்தார். இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதனால், சனிக்கிழமை பிற்பகல் முதல் மறுநாள் மாலை வரை மும்பையில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதை விமர்சித்து இளம் பெண் சாகின் தாதா, பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். மற்றொரு இளம்பெண் ரேணு ஸ்ரீனிவாசன் இதை ஆதரித்து இருந்தார். இது தொடர்பாக சிவசேனா பிரமுகர் செய்த புகாரை தொடர்ந்து, 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, சாகினின் மாமனார் அப்துல் தாதாவுக்கு சொந்தமான மருத்துவமனையை சிவசேனாவை சேர்ந்த கும்பல் அடித்து நொறுக்கியது.உலகின் மிகப் பிரதானமான பயங்கரவாதிகளில் ஒருவரான பால்தாக்கரே பல முஸ்லீம்களைப் படுகொலை செய்யக் காரணமானவர். செய்ய குற்றத்திற்கு தண்டிக்கப்படாமலேயே அவர் இறந்து போனார். இந்துத்துவா இனால் முலாமிடபப்பட்டுள்ள இந்திய அதிகார வர்க்கமும் போலீஸ் துறையும் இந்த இரு பெண்களையும் கைது செய்தது பால் தாக்கரே ஐ கைது செய்யாமல் இருந்ததை விட அவமானகரமான செயல். அடிபடைக் கருத்துச் சுந்ததிரத்தைக் கூட மறுக்கும் இந்திய அதிகாரவர்க்கம் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

Exit mobile version