1984 – 1990ம் ஆண்டு வரையில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குதல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பயங்கரவாதிகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
90 களின் பின்னர் இன்று வரை இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதும் இந்திய அரசே என்பதை சம்பிக ரணவக்க வசதியாக மறந்துவிட்டார். சம்பிக்க மற்றும் அவர் சார்ந்த அரசு போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் நடத்தியபோது இந்திய அரசும் இணைந்தே நடத்தியது என்பதையும் அவர் மறந்துவிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யும் போது பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெள்ளவத்தை, புறக்கோட்டை போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் எவ்வாறு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களை நாம் தாக்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே இவ்வாறு இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் கேள்வியுறும் புலம்பெயர் அரசியல் ‘அறிஞர்கள்’, இனி இந்தியா மாறிவிட்டது தமிழீழம் தெரிகிறது என்றும், இதெல்லாம் தேசியத் தலைவர்களின் வியூகம் என்றும் மன்மோகன் படத்தின் முன்னால் விசிலடித்தாலும் வியப்படைவதற்கில்லை.