இலங்கையில் அமைதியை நிலைநாட்டி, அபிவிருத்தியை மேற்கொள்ளவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தமது அரசு உதவி செய்யும் என, வியட்னாம் அரசாங்கம் சிறீலங்கா அரசுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளது.
வியட்னாம் சென்றுள்ள சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாக, அந்த நாட்டின் பிரதமர் நிகுயென் ரன் டுங்கை (Nguyen Tan Dung) சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த போகொல்லாகம, ஐக்கிய நாடுகள் சபையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கியமைக்கு வியட்னாமிற்கு நன்றி தெரிவித்ததுடன், வியட்னாம் பிரதமரை தமது நாட்டிற்குப் பயணம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை, மற்றும் விவாதத்திற்கு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிறேசில் அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரஸ்யா, யப்பான், வியட்னாம் போன்ற நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.