30.11.2008.
“மும்பையில் பயங்கரவாதிகளை அழித்து வெற்றிகரமாக அந்நகரை அவர்க ளின் பிடியிலிருந்து மீட்க பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியா கங்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத் துகிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். மேலும், மும்பை பயங்கர வாதத் தாக்குதலை எவரும் அரசியல் படுத்தக்கூடாது என்றும், மதவெறிமய மாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சனிக்கிழமை கூடியது. கூட்டத் தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, மும்பையில் பயங்கர வாதிகளுக்கு எதிரான அதிரடித் தாக்கு தல் நடத்தி வெற்றி கண்ட பாதுகாப் புப்படையினரை பாராட்டி கட்சியின் அர சியல் தலைமைக்குழு கூட்டத்தில் சிறப் புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என் றும், இந்த தாக்குதலின்போது, மக்களின் உயிர் காக்க தங்களது இன்னுயிரை தியாகம் செய்த காவல்துறை மற்றும் பாது காப்புப்படை அதிகாரிகளின் குடும்பத் தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரி வித்துக் கொள்வதாகவும் கூறினார்.
“மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் ஒரே நோக்கம், இந்தியாவில் ஒரு பெரிய அச்சுறுத்தலை உருவாக்குவதே ஆகும். பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று நாங்கள் கூறி வருவதை மீண்டும் ஒரு முறை இந்தச் சம்பவங்கள் நிரூபித்துள் ளன. இது முற்றிலும் தேச விரோதமானது. இத்தகைய பயங்கரவாத சதிகளை அடி முதல் நுனி வரை வேரோடு களைந் தெறிய வேண்டும் என்ற சிந்தனை மட் டுமே, பயங்கரவாதத்தை பற்றி பேசும் போது அனைவருக்கும் இருக்க வேண் டும்” என்று குறிப்பிட்ட சீத்தாராம் யெச் சூரி, நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளையும் உடன டியாக களைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண் டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது என்றும் கூறினார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலை தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு காங் கிரசும், பாஜகவும் பயன்படுத்திக் கொள் ளும் விதத்தில் பரஸ்பரம் வசை பொழிந்து விளம்பரங்கள் செய்து கொண்டி ருக்கிறார்களே என்ற கேள்விக்கு பதில ளித்த சீத்தாராம் யெச்சூரி, இத்தகைய தாக்குதல்கள் அரசியல்படுத்தப்படக் கூடாது; மதவெறி மயமாக்கப்படக் கூடாது, ஒட்டுமொத்த நாடும் பயங்கர வாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம். அனைத்துக் கட் சிகளும் தங்களது அரசியல் மாறுபாடு களை களைந்து இத்தகைய தேசவிரோத சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். (பிடிஐ)