காலியில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் பிராந்திய கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதே வேளை கடற்கொள்ளையைத் தடுப்பதற்காக என்று பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு 8 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை கடந்த வருட இறுதியில் வழங்கியது. அவுஸ்திரேலிய அரசு இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளை இலங்கை அரசிற்கு இலவசமாக வழங்கியுள்ளது.
தெற்காசிய அரச பயங்கரவாதத்தின் மையமாக இலங்கை அரசு செயற்படுவதற்கான ஆபத்துக்கள் தோன்றியுள்ளதை இவை வெளிக்காட்டுகின்றன. உலகின் பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறையும் தெற்காசிய நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தோன்றுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை ஒடுக்குவதற்கு இலங்கை அரச பயங்கரவாதிகள் பயன்படுத்தப்படுவார்களா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
அல்கையிதா என சந்தேகிக்கப்பட்டவர்களை தடுப்பு முகாம்களை நோக்கிக் கடத்துவதற்கான இடைத்தங்கல் தளமாக இலங்கை விமான நிலையம் பயன்படுத்தப்பட்டமை, அமரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிளேக் ஆப்கான் இராணுவத்தில் இலங்கை இராணுவத்தை இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்தமை போன்ற நிகழ்வுகள் பல சந்தேகங்களை உலக அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.