ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொரியாவின் சுங்ஜு நகரத்தில் ஜூன் 13, 1944 அன்று பிறந்தவர் பான் கி மூன். 67 வயதான தென் கொரிய முன்னாள் அயலுறவு அமைச்சரான பான் கி மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
மீண்டும் ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பான் கி மூன் 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். பாதுகாப்பு சபையும் அவருக்கு ஆதரவு அளித்தது.
தன்னை மீண்டும் பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுத்து மிகப் பெரிய கெளரவம் அளிக்கப்பட்டிருப்பதாக பான் கி மூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.