நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹந்தபங்கொடை நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நமது நாடு சிறிய நாடு என்பது உண்மை. எம்மிடம் போதியளவு ஆயுதபலம் இல்லை என்பது உண்மை.ஆனால் அதையே காரணமாக வைத்துக்கொண்டு எமக்கு அதிகாரம் செய்ய முயற்சிப்பார்களானால் அது தவறானதாகும்.
ஈராக்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு ஏன் அந்த நாடுகளில் தலையிட முடியாது? மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய அந்த நாடுகளில் மாத்திரம் ஏன் குழுக்களை நியமிக்க முடியாது?
நாம் இதனை தெளிவாக சிந்திக்க வேண்டும்” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.