Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பன்கீ மூனின் அறிக்கை விவாதத்திற்கு உட்படுத்தப்படும்

ஐக்கிய நாடுகள் மனித் உரிமை ஆணைக்குழுவிற்கு அந்நிறுவனத்தின் செயலாளர் பன் கீ மூன் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித் உரிமை வழக்குரைஞர் இதனைத் தெரிவித்தார்.
பன் கீ மூனின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு கடந்த ஏப்பிரல் மாதம் வெளியான அறிக்கையே ஆணைக்குழுவில் விவாதத்திற்காக முன் மொழியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்டால் மட்டுமே பன் கீ மூன் அறிக்கையை ஆணைக்குழுவின் முன்னால் சமர்ப்பிக்க அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும், ஈழப் போராட்டம் என்பது வெறும் போர்க்குற்றங்கள் குறித்த பிரச்சனை என்பதற்கு அப்பால், மனித உரிமை மீறல் குறித்த பிரச்சனை என்பதற்கு அப்பால், தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமை குறித்த போராட்டம் என்பதை உலக அரங்கில் தெரியப்படுத்த இச் சந்தர்ப்பத்தை புலம் பெயர் அமைப்புக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Exit mobile version