தென்னிந்திய திரைப்படப் பாடகியான எஸ்.ஜானகிக்கு பத்ம பூஷண் விருது வழங்க்கப்பட்டது. இவ்வளவு நாட்களின் பின்னர் தனக்குக் கிடைத்திருப்பது மிகவும் தாமதமானது எனவும் தென்னிந்தியர்களை விட வட இந்தியர்களுக்கே இந்த விருதுகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாலும் தான் இந்த விருதைப் புறக்கணிப்பதாக ஜானகி கூறியுள்ளார். 1957ஆம் ஆண்டு தொடங்கி 55 வருடங்களாய் ஜானகி திரைப்படங்களில் பாடிவருகின்றார்.
தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட்ட தென்னிந்திய மொழிகளில் பெரும்பான்மையாகவும் ஹிந்தி உட்பட வேறு பல மொழிகளிலுமாக பதினையாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் இவர் பாடியுள்ளார்.
குடியரசு தினத்துக்கு முன்பாக இவ்வாண்டின் ‘பத்ம’ விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்ம பூஷன் விருது தனக்கு வழங்கப்படவிருப்பதை அறிந்த ஜானகி, இந்த விருதைத் தான் ஏற்க மறுப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஒஸ்கார் கனவில் தவழும் இந்தியர்கள் பலர் இனிமேல் உள்ளூர் விருதைப் புறக்கணிப்பார்களோ?