Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பதவி விலக மாட்டேன்:பதைபதைக்கும் விக்கி

cvvikiவட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறியை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஐந்து ஆண்டு காலம் பதவியில் அமர்த்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு விக்னேஸ்வரன் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறு தாம் யாரிடமும் பதவி விலகுவது குறித்து அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்படுகொலை அரசின் எல்லைக்குள் சட்டங்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்ட மாகாண சபை ஊடாக மாற்றங்களைக் கொண்டுவருவேன் என பூவோடும் பொட்டோடும் ஆட்சிக்கு வந்த விக்னேஸ்வரன் இதுவரையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.

தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களைக் கூட தலைமை தாங்க மறுத்து இலங்கையில் இன்னும் ஜனநாயகம் நிலவுகிறது என போலியன விம்பத்தைக் கொடுக்கும் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடு.

விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை இனக்கொலை அரசின் ஒடுக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது. நிலப்பறிப்பும் பௌத்த சிங்கள மயமாக்கலும் எந்தத் தடையுமின்றித் தொடர்கின்றன. போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப்போவதாக ஏகாதிபத்திய நாடுகள் ஆடும் நாடகத்தில் சாமியார் வேடம் போடும் விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்த குழு போராட்டங்களைத் தடுப்பதற்கான மற்றொரு உக்தி.

Exit mobile version