Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பணியாளர்கள் படுகொலை தொடர்பில், சர்வதேச ரீதியிலான விசாரணைகளைக் கோர எக்ச்ய்ன் பெய்ம் நிறுவனத்திற்கு உரிமையில்லை:நிசாங்க உதலாகம

 

2006ம் ஆண்டு, மூதூர் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் படுகொலைச் சம்பவம் தொடர்பில், சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென எக்சய்ன் பெய்ம் நிறுவனத்திற்கு கோர முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்  நிசாங்க உதலாகம  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது எக்ச்ய்ன் பெய்ம் நிறுவனம் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.சீ.எப். அமைப்பின் சர்வதேச தலைமைக் காரியாலயம் மற்றும் உள்நாட்டு கிளை நிறுவனம் ஆகியவற்றுக்கு விசாரணைகளில் பங்கேற்குமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் உரிய  பதில்கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மூதூர் சம்பவம் தொடர்பாக சர்வதேச ரீதியில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அந்த நிறுவனம் அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்தக் கருத்துக்கைள வெளியிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளை நடத்திய போது ஜனாதிபதி ஆணைக்குழு பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எக்ச்ய்ன் பெய்ம் பணியாளர் கொலை தொடர்பாக செய்திமதி தொழில்நுட்ப முறையில் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இடைநடுவில் நிறுத்திப்பட்டதாக விசாரணைக்காக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்ட மூலம் அமுல்படுத்தப்படாத வரையில் சரியான சாட்சியங்களை திரட்டுவதில் சிக்கல்கள் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்ட மூலம் இதுவரையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தினால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version