04.04.2009.
நாங்கள் விரும்புவது அரபு நாடுகளுடன் வெறும் வர்த்தக உறவல்ல என்றும், பணக்கார நாடுகளின் பிடியிலிருந்தும் முடிவுகளிலிருந்தும் விடுதலை பெறுகிற அரசியல், பொருளாதார உறவையும்தான் விரும்புகிறோம் என்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கூறினார். மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆட்சித் தலைவர்களும் ஒரு துருவ உலகிலிருந்து மாற்றம் காணவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர்.
மாறிய உலகச் சூழ்நிலைமைகளை எதிர்கொள்ள அரபுநாடுகளும் லத்தீன் (தென்) அமெரிக்க நாடுகளும், கைகோர்க் கின்றன. கத்தாரின் தலைநகரான தோஹாவில் அரபு உச்சிமாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற இரண்டாவது அரபு-தென்அமெரிக்க உச்சிமாநாடு இரு பிராந்தியங்களுக்கும் இடையேயான உறவில் ஒரு மைல்கல்லாகத் திகழும். ஒரு துருவ உலகிலிருந்து பல்துருவ உலகிற்கான மாற்றத்தையே இது குறிப்ப தாக அரசியல் நோக்கர்கள் கருது கிறார்கள்.
டாலருக்கு பதிலாக ‘பெட்ரோ கரன்சி’ வேண்டும் என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் யோசனை தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளுக்கும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமைப்பான ‘ஓபெக்’கில் இடம்பெற்றுள்ள வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அரபு உலகிற்கும், லத்தீன் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் புதிய பகுதிகளுக்கு விரிவு படுத்த உச்சிமாநாடு முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்திட்டத்தை வகுக்க 22 உறுப்பினர்-அரபு லீக் அமைப்பும், லத் தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 12 நாடு களும் பங்கேற்ற இந்த உச்சிமாநாடு முடிவு செய்தது.
பாலஸ்தீன சுதந்திரத்திற்கான அரபு உலகின் போராட்டங்களுக்கும் அமைதி முயற்சிகளுக்கும் சாவேஸ் (வெனிசுலா), லூலா (பிரேசில்) அடங்கிய லத்தீன் அமெரிக்கா தனது வலுவான ஆதரவை உச்சிமாநாட்டில் தெரிவித்தன. லத்தீன் அமெரிக்காவுக்கும் அரபு உலகிற்கும் இடையே பல்வேறு விஷயங்களில் ஒற்றுமை உள்ளது என்றும், ஒரே மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் உச்சிமாநாட்டின் துவக்க உரையில் கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல்தானி அறைகூவல் விடுத் தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி வீழ்ச்சிக்கான நேரம் நெருங்கிவிட்டது என்று உச்சிமாநாட்டிற்கிடையே அல்ஜ சீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில் சாவேஸ் கூறினார்.
சூடான் ஜனாதிபதி உமருல் பசீருக்கு எதிராக சர்வதேச குற்ற விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட், நீதித்துறை பயங்கரவாதமாகும் என்று சாவேஸ் வர்ணித்தார். இதன் மூலம் மூன்றாம் உலக நாடுகளை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் நிறுத்த அமெ ரிக்கா முயற்சிக்கிறது. பசீருக்கு எதிராக அல்ல; படுகொலைகளுக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் புஷ்சுக்கும் முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதி ஹிமோன் பெரஸூக்கும் எதிராகத்தான் வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். இனப்படுகொலை கொள்கையை கைவிடும்வரை இஸ்ரேலு டன் தூதரக உறவை மீண்டும் ஏற்படுத் திக்கொள்ள மாட்டோம் என்றும் சாவேஸ் கூறினார்.
இரண்டு கோடிக்கும் அதிகமான அரபு இனத்தவர்கள் தென் அமெரிக்கா வில் உள்ளனர். பெரு, கொலம்பியா தவிர மற்ற தென் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் இன்று இடதுசாரி-சோசலிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத் தாண்டவத்தை கடுமை யாக எதிர்க்கின்ற தென் அமெரிக்காவுக் கும், அரபு உலகிற்கும், இடையே ஏற்படும் உறவு, புதிய உலக முறைமைக்கு வழி வகுக்கும் என்பதற்கான அறிகுறி தென்படுகிறது.