நகர அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், காணி மறுசீரமைப்பு திணைக்களம் ஆகிய அரசாங்க நிறுவனங்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அமைச்சின் பொறுப்புக்கள் குறித்து அதன் செயலாளர் கோதாபாய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனை மேம்படுத்துவதே பாதுகாப்பு அமைச்சின் தலையாய கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பேரினவாதத் தீ கொழுந்து விட்டெரியும் சூழலில் போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் கோதபாய ராஜபக்சவின் இந்தக் கருத்து அரசின் மனோ நிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.