படையினர், எங்களை ஒரு தனியான அறையில் மூன்று மூன்று பேராக கொண்டு சென்று நிர்வாணமாக்கி சோதனை செய்கின்றனர், நிர்வாணமாக்கி ஒவ்வொரு உறுப்புக்களையும் தடியால் தட்டி உங்களைப் பாதுகாக்க இப்போது யாரும் இல்லையே என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர் என கொழும்பு மாவாட்ட நீதிவான் முன்னிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தடுப்புக் காவல் நீடிப்பினைப் பெறுவதற்காக கொழும்பு மாவாட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.