தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவை சோனாதிராஜா(பா.உ.), யாழ். குடாநாட்டில் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து, பிரதமர் உடனடியாக இச்சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்;ளார். இது தொடர்பாக மாவை சோனாதிராஜா பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு மாதகாலமாக இடம் பெற்று வரும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அனைத்தும் அங்கு நிலை கொண்டுள்ள படையினர் அறியாத வகையில் நடந்தேறுவதற்கு சாத்தியமே இல்லை எனவும் குறிப்பிட்டும் இருக்கிறார்.
கவனயீர்ப்பு பிரேரணைனக்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, இந்தப் பிரேரணை பற்றி ஏற்கனவே ஆளும் தரப்பிற்கு முறையாக அறியத்தரப்படவில்லை எனினும் பிரேரணையை இன்று முன்வைப்பதற்கு அனுமதியளித்தோம், எனினும் அது தொடர்பாக உடனடியாகப் பதிலளிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். யாழில் மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ள நிலைமைகள் தொடர்பாக அரசாங்கத் தரப்பினரின் பதில் இதுதான்.