Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

Marikana_massacreகடந்தவருடம் உதிய உயர்வு கோரிப் போராட்டம் நடத்திய சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஐம்பதிற்கும் அதிகமானவர்களைக் கொலைசெய்தும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தியும் இனப்படுகொலை நடத்தியது தென்னாபிரிக்க அரசு. உலகம் முழுவதைலும் மனிதத்தை அதிரச்செய்தது இந்தக் கொலைகள். அழிக்கப்பட்ட மரிக்கானா தொழிலாளர்களின் குடும்பங்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய மட்டுமே முடிந்திருக்கிறது. நேற்று முன் தினம் 26ம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியளித்த Siphethe Phatsha தனது நேரடி அனுபவங்களை விபரித்தார்.

கொல்லப்பட்டு விழுந்த பிணங்களுக்கு மேலால் பாய்ந்து வந்து தப்பியோடியவர்களைத் தாக்கினார்கள். என்னை ஹெலிக்கொப்டரிலிருந்து குண்டுகளால் தாக்கினார்கள் என்று குறிப்பிட்டார். மரிக்கானா படுகொலைகளின் இரத்தம் காயுமுன்னரே இலங்கையில் ஜனநாயகத்தை மீட்க தென்னாபிரிக்க அரசு கைகளை நீட்டியது.

அதனைப் பற்றிக்கொண்டவர்கள் தமிழர்களின் தலைமை என்று மார்தட்டிக்கொள்ளும் ஐந்தாம்படைகள்.

நேற்றையதினம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுக் காட்டிக்கொடுப்பில் தென்னாபிரிக்க அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version