வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் பட்டதாரி தமிழ் இளைஞர்களை எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே
போர் நடைபெற்ற காலத்திலேயும் போருக்கு முந்தைய காலகட்டத்திலும் எந்தவித ஆயுதங்களையும் கையில் எடுக்காமல் வன்முறைக்கு உட்படாத புலிகளின் அரசியல் பிரிவுகளிலும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த படித்த பட்டதாரி தமிழ் இளைஞர்களை போர்க்காலத்தில் சிங்கள ராணுவம் கைதுசெய்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ‘புலிகளின் அரசியல்’ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே வவுனியாவில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அந்தச் சிறையில் ஏற்கனவேயுள்ள ஏனைய சிங்களக் குற்றவாளிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உணவு, உடை போன்ற அத்தியாவசியங்கள் மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி இவர்களை உளவியல் ரீதியான கொடுஞ் செயல்களுக்கு உட்படுத்தி மனநிலை பாதிக்கச் செய்கின்றனர்.
கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் மீதம் இருப்பது 150படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே.
இலங்கை அரசு சிறையில் அடைத்து வைத்திருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவும், அவர்கள் குறித்த விபரங்களை வெளியிடவும் உலகம் தழுவிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான உலகளாவிய போராட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்த மக்கள் பற்றுள்ள அனைவரும் முன்வர வேண்டும்.