Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

படங்களுக்குத் தடை, நஷ்ட ஈடு கேட்டு வழக்கு- பிரச்சனை வலுக்கிறது.

நடந்து முடிந்த iifa விழாவில் பங்கேற்ற இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோரின் படங்களுக்கு 5 தென் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டு மொத்தமாக இவர்களின் எந்தப் படங்களும் ஓடாத நிலையில் தியேட்டர் அதிபர்கள் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தை அணுக, தயாரிப்பாளர் சங்கமோ இதற்குப் பொறுப்பு தடையை மீறி விழாவுக்குச் சென்றவர்கள் தானே தவிற நாங்களல்ல. இவர்களின் படங்களை வாங்கி நீங்கள் நஷ்டமடைந்தால் அதற்குரிய நஷ்ட ஈட்டை அவர்களிடமே கோரிப்பெறலாம் அல்லது நீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்ல கரண் ஜோகர் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி திரையிடப்படாமல் இருக்கும் கைட்ஸ் படத்தில் அடைந்த நட்டத்திற்காக அவர் மீது வழக்குத் தொடர ஆலோசனை நடந்து வருகிறது.

மேலும் பாதிப்பு
…………………………………

அடுத்தடுத்து வெளியாக இருக்கும் சல்மான்கான் கரீனாகபூரின் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பிரச்சனை அடுத்தடுத்த நாட்களில் இந்திய ஊடகங்களில் விஷவரூபம் எடுக்கலாம்.இந்நிலையில் இந்தி நடிகர்களை வைத்து சில தமிழ் இயக்குநர்கள் படம் இயக்கக் காத்திருந்தனர், திரையுலகில் எழும் பிரச்சனையால் அந்த முயர்ச்சிகளும் பின்னடைவைச் சந்தித்திருகின்றன.

Exit mobile version