Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ப.ஜ.க தூண்டிய கலவரம் : பற்றி எரிகிறது ஜம்மு கஷ்மீர்

அமர்நாத் குகைக்கோவிலுக்கு நிலம் அளிப்பது தொடர்பான விவ காரத்தால் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பற்றி எரிகிறது. கடந்த சுமார் 2 மாத காலமாக தொடரும் வன்முறையின் உச்சகட்டமாக செவ்வாயன்று போலீ சார் மற்றும் பாதுகாப்புப் படையின ரின் துப்பாக்கிச் சூட்டிற்கு 12 பேர் பலியாகினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் குகைக்கோவிலுக்கு வன நிலத்தை அளிப்பது தொடர்பாக காஷ்மீரில் பிரச்சனை எழுந்தது. இதைத் தொடர்ந்து புதிதாக அனுப் பப்பட்ட ஆளுநர் என்.என்.வோரா, அமர்நாத் கோவிலுக்கு நிலம் அளிக் கும் உத்தரவை ரத்து செய்தார்.

இதற்காகவே காத்திருந்த பாஜக, ஜம்மு பிரதேசத்தில் வாழும் இந்துக் களை மதரீதியாக தூண்டி விட்டுள் ளது. பாஜகவின் வழிகாட்டுதலுடன் செயல்படும் ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி எனும் மதவெறி அமைப்பு, ஜம்மு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குறிவைத்து வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டுள்ளது. முஸ்லிம் மக்க ளின் கடைகள் சூறையாடப்பட்டன. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ் லிம்கள் அதிகம் வாழும் ஸ்ரீநகர் உள் ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில், மக் கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அர சியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பு களும் போராட்டத்தில் இறங்கின. இப் போராட்டத்தை தங்களது நோக் கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஹூரி யத் மாநாடு உள்ளிட்ட சில பிரிவினை வாத இயக்கங்களும் களமிறங்கின. இத னால் ஜம்முவிலும், காஷ்மீரிலும் இரு பிரிவைச் சேர்ந்த மக்களும் வன்முறை யின் பிடியில் சிக்கியுள்ளனர்.

தொடர்ந்து அனைத்துக் கட்சிக ளைக் கூட்டி ஆலோசனை நடத்தினா லும், இப்பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வ தில் தோல்வி அடைந்துள்ள மன் மோகன் சிங் அரசு, ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை இறக்கி விட் டுள்ளது.

எனினும், போராட்டங்களும், வன்முறையும் தொடர்கிறது.

இச்சூழலில் திங்களன்று, ஜம்முவில் மதவெறியர்கள் நடத்தும் தாக்குதல் களை கண்டித்து, காஷ்மீரை விட்டு வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் தலைநகர் முசாபரா பாத்திற்கு செல்லப் போவதாக காஷ் மீர் பிரிவினைவாதிகள் அறிவித்தனர். இதன்படி ஸ்ரீநகரில் அத்தகைய போராட்டம் துவங்கிய போது, பாது காப்புப் படையினருக்கும், போராட் டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் நடந்த துப்பாக்கிச்சூடு களில் ஹூரியத் மாநாடு அமைப்பின் முக்கிய தலைவரான அப்துல் அசீஸ் ஷேக் உட்பட 5 பேர் கொல்லப்பட் டனர். இது காஷ்மீரில் மேலும் வன் முறையை தீவி ரப்படுத்தியுள்ளது.

செவ்வாயன்று அப்துல் அசீஸ் ஷேக்கின் இறுதி நிகழ்ச்சி நடை பெற் றது. அங்கு கூடியிருந்த ஹூரியத் ஆதர வாளர்களும், காஷ்மீரின் இதர பல்வேறு பகுதிகளின் ஹூரியத் மற்றும் பிரிவினை வாத அமைப் பினரும் ஊடரங்கு உத் தரவை மீறி போராட்டத்திலும், வன் முறையிலும் ஈடுபட்டனர். இவர்கள் மீது பாது காப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள அரி பல், ஸ்ரீநகர் அருகே உள்ள லஸ் ஜன் ஆகிய இடங்களில் தலா 3 பேர் துப்பாக் கிச்சூட்டில் கொல்லப்பட் டனர்.

ரெய்னாவரி, பாஹேம் மகதத், ஜூன் மர் உள்ளிட்ட ஸ்ரீநகரின் அருகே உள்ள பகுதிகளில் தலா 1 நபர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டார்.

இந்நிலையில், ஜம்முவிலும் வன் முறை தொடர்ந்தது. ஜம்மு அருகே உள்ள ஹிஸ்ட்வார் பகுதியில் துப் பாக்கிச்சூட்டிலும் குண்டுவெடிப்பி லும் இரண்டு பேர் கொல்லப்பட் டதாக தகவல் தெரிவிக்கிறது.

அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடுகள், தொடரும் வன்முறையால் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இந்நிலையில், மாநிலம் முழு வதும் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப் பித்துள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இதனிடையே, தலைநகர் டில்லி யில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் செவ்வாயன் றும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி பங்கேற்கவில்லை. அவர் ஸ்ரீநகரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இக்கூட்டத் தில் பங்கேற்ற பாஜக தலைவர் அருண் ஜேட்லியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரு மான பரூக் அப்துல்லாவும் கடுமை யான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட் டத்தின் பாதியிலேயே இருவரும் வெளியேறினர்.

அமர்நாத் நில விவ காரத்திற்கும், அதையொட்டி காஷ் மீரில் நிலவும் தொடர் பதட்டத் திற்கும் தீர்வு காணாமலே, இந்த கூட் டம் முடிவடைந்தது. எனினும், மீண் டும் இப்பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமை யில் புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Exit mobile version