Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பசிலின் இந்தியப் பயணமும் பிழைப்புவாதிகளின் இந்திய விசுவாசமும்

BASIL_KHURSHIஇந்தியாவிற்கு சென்ற பசில் ராஜபக்ச இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் பாதுகாப்பு செயலாளர் ஷிவ் சங்கர் மேனனையும் சந்தித்தார். இலங்கை அரசாங்கம் பல நாடுகளில் கடன் பெற்றுக்கொள்கிறது ஆயினும் இலங்கை அரசிற்கு மானியம் வழங்கிவரும் ஒரே நாடான இந்தியாவிற்கான பசிலின் பயணம் தமிழ் அரசியல்வாதிகளாலும் ‘ஆய்வாளர்களாலும்’ மிகைப்படுத்தப்படுகிறது. இந்தியா ஏதோ தமிழ்ப் பேசும் மக்களின் உரிமையில் அக்கறை கொண்ட நாடாகவும் பசில் ராஜபக்சவிற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் செய்திகளை வெளியிடுகின்றன.
இந்திய அரசு எமக்காக செயற்படுகிறது என்றும் இனிமேல் தமிழ் நாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் ஈழப் பிரச்சனைய இந்தியாவோடு பேசி நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறுவதற்கு இந்திட அரசும் ஏனைய உலக அரசுகளும் அடியாள் கூலிக் கும்பல்களை உருவாக்கி வருகின்றன. இந்தியா, சீனா அமரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியனாடுகளின் பல்தேசிய மாபியாக்கள் தமது சட்டவிரோதப் பணத்தை மக்களைக் கொள்ளையிடுவதற்காக முதலிடும் சொர்க்க பூமியாக இலங்கை மாறியுள்ளது.
இவை அனைத்தையும் மறைக்கும் அரசியல் பிழைப்புவாதிகள் இந்தியா ஈழம் பிடித்துத் தருகிறது என்ற அளவிற்கு மீண்டும் பிரச்சாரப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஷிவ் சங்கர் மேனனின் இலங்கைப் பயணத்தையும் பசிலின் இந்தியப் பயணத்தையும் மிகைப்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இந்தியா வடக்குத் தேர்தல் குறித்தும், அபிவிருத்தி -அதாவது தமது பல்தேசிஅ நிறுவனங்ளின் கொள்ளை- குறித்தும் பசிலிடம் மகிழ்ச்சி தெரிவித்ததாக இந்திய செய்தி முகவர்கள் வெளியிட்ட செய்திகளைக் கூட மறைத்து தமது எஜமான விசுவாசத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர்.

Exit mobile version