Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பங்களாதேஷில் இராணுவப்புரட்சி!

பங்களாதேஷின் துணை இராணுவக் குழுவான ரைபல்ஸ் இன்று வியாழக்கிழமையும் புரட்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளின் வீதிகளிலிறங்கி ரைபல்ஸ் துருப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பங்களாதேஷ் பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பள உயர்வுக் கோரிக்கை உட்பட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி பங்களாதேஷ் ரைபல்ஸ் துணை இராணுவக் குழுவினர் நேற்று புதன்கிழமை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் போது அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ரைபலின் உயர் அதிகாரிகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பங்களாதேஷின் இராணுவத்தினர் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்து தமது கட்டுப்பாட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்றையதினம் பங்களாதேஷின் ஏனைய பகுதிகளில் ரைபல்ஸ் துருப்பினர் புரட்சியில் ஈடுபட்டிருப்பதா அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மக்களை அமைதிகாக்குமாறு பங்களாதேஷ் பிரதமர் ஷோக் ஹசீனா கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறைகளைத் தொடர்ந்து பங்களாதேஷில் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் யாவும் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது

Exit mobile version