பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து தனிநாடாக உருவானது. 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாட்ட்டுப் போர்
பங்களாதேஷ் இஸ்லாமிய சட்டப்படி இவர்கள் தூக்கிலிடப்படுக் கொலைசெய்யப்பட வேண்டும். இருப்பினும் நீதிமன்றம் இனக்கொலையாளிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. உலகில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ் உலகில் ஊழல் மலிந்த நாடுகளில் ஒன்றாகும்.
இனக்கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியமையைக் கண்டித்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கக்கோரி தலைநகர் டாக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக ஆயிரக்கணக்கில் இளைஞர்களும் மக்களும் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இஸ்லாமிய நாடொன்றில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக மக்கள் எழுச்சிபெற்ற அரிதான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிகாதிய சுலோகங்களின்றிய மக்களின் போராட்டம் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர் இவர்களில் ஒருவர் போராட்ட ஒழுங்கமைப்பாளராகும்.
நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இஸ்லாமியக்கட்சியினருக்கு மரணதண்டனை வழங்கத்தக்க வகையில் சட்டவாக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்த பின்னர் ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இதே வேளை ஜமாத் இஸ்லாமியக் கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
தெற்காசியாவில் ஒவ்வொரு சமூகத்திலும் மேல்தட்டு தரகுகள் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக ஏனைய சமூக வர்க்க அடுக்குகளை ஒழுங்கமைக்காத எந்தப் போராட்டமும் மேல்தட்டு வர்கத்தினால் பயன்படுத்தப்பட்டு அழிக்கப்படும். அரேபிய எழுச்சிகள், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் போன்றன அழிக்கப்பட்டதன் அடிப்படை இதுவே.
பங்களாதேஷ் ஒடுக்கப்படும் மக்கள் இப்போராட்டங்கள் ஊடாக அந்த நாட்டை ஆளும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் எதிரான போராடத்தை ஆரம்பிப்பார்களானால் அது புதிய ஆரம்பமாக அமையும்.