Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ந‌ளி‌னி வழ‌க்கு : மனு ‌மீதான ‌விசாரணை

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் வேலூ‌ர் ‌சிறை‌யி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌னி, த‌ன்னை மு‌ன்கூ‌ட்டியே விடுதலை செ‌ய்ய‌க்கோ‌‌ரி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு ‌மீதான ‌விசாரணையை செ‌ன்னை உ‌ய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அடு‌‌த்த வார‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த வழ‌க்‌கு ‌நீ‌திப‌தி ஏ.நாகமு‌‌த்து மு‌ன்‌னிலை‌யி‌ல் ‌இ‌ன்று ‌‌மீண்டும் விசாரணை‌க்கு வ‌ந்தது. அப்போது அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இன்று வரவில்லை எ‌ன்பதா‌ல் இ‌ந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகளுக்கு முன்பு நளினி தொடர்ந்த இ‌ந்த வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

பதில் மனு தாக்கல் செய்யாமல் காலம் கடத்துவதா எ‌ன்று‌ம் அடுத்த முறை பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று‌ம் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜீ‌‌‌‌வ் கா‌ந்‌தி படுகொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌‌ம் சா‌ட்ட‌ப்ப‌ட்டு வேலூ‌ர் ம‌த்‌திய ‌சிறை‌‌யி‌ல் ஆ‌யு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌னி, த‌ன்னை‌ ‌மு‌ன்கூ‌ட்டியே விடுதலை செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இர‌ண்டு ‌ரி‌ட் மனு‌க்களை‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

முத‌ல் மனு கட‌ந்த 2006ஆ‌ம் ஆ‌ண்டு‌ம், இர‌ண்டாவது மனு ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி‌யி‌ன் மக‌ள் ‌பி‌ரிய‌ங்கா கா‌‌ந்‌தி ந‌ளி‌னியை ‌வேலூ‌ர் சிறை‌யி‌ல் நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌‌த்து பே‌சிய ‌பி‌ன்ன‌ர், 2008ஆ‌ம் ஆ‌ண்டு‌ம் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த இர‌ண்டு மனு‌க்க‌ள் ‌மீதா‌ன இறு‌தி‌க்க‌ட்ட ‌விசாரணை ‌கட‌ந்த ஆக‌ஸ்‌ட் 6ஆ‌ம் தே‌தி நீ‌திப‌தி ஏ.நாகமு‌த்து மு‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது ம‌‌த்‌திய, மா‌நில அரசு வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள் ஆஜரா‌கி இ‌ந்த மனு ‌மீது ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய மேலு‌ம் கால அவகாச‌ம் கே‌ட்டன‌ர்.

இதையடு‌த்து, ‌ப‌‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய மேலு‌ம் கால அவகாச‌ம் அ‌ளி‌த்ததோடு, இ‌வ்வழ‌க்‌கி‌ன் இறு‌தி‌க்க‌ட்ட ‌விசாரணையை ஆக‌ஸ்‌ட்11ஆ‌ம் தே‌தி‌க்கு ‌‌நீ‌திப‌தி த‌ள்‌ளிவை‌‌த்தா‌ர்.

ஆக‌ஸ்‌ட் 11ஆ‌ம் தே‌தி வழ‌க்கு ‌விசா‌ரணை‌க்கு வ‌ந்தபோது கால அவகாச‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் கே‌ட்டன‌ர். இதனா‌ல் ‌‌நீ‌திப‌தி ஏ. நாகமு‌த்து இ‌ந்த வழ‌க்‌கி‌ன் ‌விசாரணையை ஆக‌ஸ்‌ட் 20ஆ‌ம் தே‌‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌த்து உ‌த்தர‌வி‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

 
 
Exit mobile version