Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்டு ராஜபக்ச அரசால் பயன்படுத்தப்பட்ட பொதுபல சேனாவின் எதிர்காலம்?

பொதுபல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தாக்குவதற்கு தயாராகும் திலந்த விதானகே தலைமையிலான துறவிகள்.
பொதுபல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தாக்குவதற்கு தயாராகும் திலந்த விதானகே தலைமையிலான துறவிகள்.

மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அடியாளை அதிகாரத்தில் அமர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. பொதுபல சேனா என்ற பௌத்த அடிப்படைவாத அமைப்பின் தோற்றம் அவற்றுள் ஒன்று. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டதும் இலங்கைக்குச் சென்ற அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், இலங்கை இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்துவதற்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.(ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு கொலைகார்களை வழங்க கோதாபய, ரொபேர் ஓ பிளேக் பேச்சு)

தேர்தலில் முஸ்லீம்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்திற்காக கோதாபய உடனடியாக ஆட்களை வழங்க கோட்டாபய மறுப்புத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பொதுபல சேனா என்ற அமைப்பு நோர்வே நாட்டின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. (பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்)

பேரிவாதத்தைத் தேர்தலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்திவந்த ராஜபக்ச அரசு பொதுபல சேனாவின் வளர்ச்சியை ஊக்குவிக்க ஆரம்பித்தது. ஏகாதிபத்தியங்களின் திட்டப்படி பொதுபல சேனாவின் வளர்ச்சி முஸ்லிம் மக்களை ராஜபக்ச அரசுக்கு எதிரானவர்களாக மாற்றிற்று. தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு இதுவே பிரதான காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. இன்று பொதுபல சேனா மைத்திரிபாலவின் ஆட்சியை உன்னிப்பாகக் கவனிப்பதாக அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலுள்ள பல அமைப்புக்கள் தமக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. பொதுபல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு இன்னும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப்படலாம் என்ற நிலையே உள் நாட்டில் காணப்படுகிறது.

Exit mobile version