Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேவிஸ் டெல்றொக்சன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா அரசினது சிறைக்காவலர்களும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து கடந்த 01-07-2012 அன்று ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அத் தாக்குல் காரணமாக படுகாயமடைந்து கோமநிலையில் இருந்த நேவிஸ்டெல்றொக்சன் என்ற தமிழ் அரசியல் கைதி 07-08-2012 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது கொலையைக் கண்டித்தும், ஏனைய கைதிகளை விடுவிக்க வேண்டுமெனக் கோரியும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்வரும் 15-08-2012 புதன்கிழமை முற்பகல் 11.00 மணி – 12.30 மணிவரை யாழ் பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள சோமசுந்தரப்புலவர் சிலையருகில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை அமைதியாகவும், ஐனநாயக முறையிலும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாயக்கட்சி, முன்னணி சோசலிசக் கட்சி, புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மற்றும் சில பொது அமைப்புக்களுடனும் கலந்துரையாடி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போhட்டத்திற்கு பொது மக்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் தலைவர்கள் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் அழைப்புவிடுக்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்

Exit mobile version